தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு
தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக மூலவர் தெய்வங்களுக்கு மற்றும் ரங்க நாயகி தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பிரதான திரு விளக்கை அலங்கரித்து கோவில் அர்ச்சகர் விக்னேஸ்வர பூஜையுடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர்.
பின்னர் பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்கள பொருட்களை வைத்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து திருவிளக்கு பூஜை செய்தனர்.
மகாலட்சுமி மந்திரங்கள் 108 போற்றி மந்திரங்கள் கூறி குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து நிறைவாக தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் உலக நன்மை வேண்டிய கூட்டு வழிபாடு செய்து பெருமாளை வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.