அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு
மேல்மலையனூர் மாசி பெருவிழா நடைபெற்று கொண்டு வரும் நிலையில் போதிய பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பேருந்து வசதி, தற்காலிக பேருந்து நிலையத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி என அடிப்படை வசதிகள் சரியாக செய்யவில்லை என பக்தர்கள் கடும் குற்றச்சாட்டு.
இருள் சூழ்ந்து இருந்ததால் திருடர்கள் அசம்பாவிதத்திற்கு பயந்து கொண்டு பேருந்தில் நிலையத்தில் தத்தளித்த பக்தர்கள்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி பெரு விழா நடைபெற்று வரும் நிலையில் கடந்த 8.3.24 கொடியேற்றுடன் தொடங்கியது சனிக்கிழமை மயான கொள்ளை மற்றும் 12.03.2024 தீமிதி திருவிழா 14.03.2024 திருத்தேர் வடம்பிடித்தல் என முக்கிய திருவிழா ஆகும்.
திருவிழா நாட்கள் என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் தினம் அதிக அளவில் பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்தன அவர்களுக்கு போதுமான குடிநீர், போக்குவரத்து வசதி, தற்காலிக பேருந்து நிலையத்தில் மின்சாரம் மற்ற உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்கள் பாதுகாப்பின்றி தவித்ததால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக கருதப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.