மருதூர் வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க அன்பர்களும் பக்தர்கள் வழிபாடு
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க அன்பர்களும் பக்தர்கள் வழிபாடு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதார இல்லம் அமைந்துள்ளது.
இன்று 154 ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் ஜோதி தரிசனம் காண வந்த சன்மார்க்க அன்பர்களும், பக்தர்கள் ஜோதி தரிசனத்தை கண்டு பின்னர் மருதூரில் உள்ள அவரது அவதார இல்லத்திற்கும் வருகை தந்து அவர்கள் அவதார இல்லத்தில் அணையா தீபத்தின் முன்னின்று மனமுருக வேண்டி பின்னர் நிலவறையில் உள்ள வள்ளலாரின் தாய் தந்தையின் திருவுருவ சிலையும் வணங்கி சென்றனர்.
தொடர்ந்து சன்மார்க்க அன்பர்களும் பக்தர்களும், வருகை தந்த வண்ணம் உள்ளனர் . அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.