சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு செல்ல இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு செல்ல இருக்கும் பக்தர்கள் அருள்மிகு பாளையஞ்சாலைகுமாரசுவாமி திருக்கோவிலில் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
அருள்மிகு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தை 6 தேதிகள் வரை தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல- மகர பூஜை உலகளவில் பிரசித்திபெற்றது.
இந்த ஆண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாத பிறப்பினை முனன்னிட்டு நேற்று மாலை சபாிமலையில் நடை திறக்கப்பட்டது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று அதிகாலை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். நெல்லையில் அமைந்துள்ள அருள்மிகு சாலை குமாரசாமி திருக்கோவில் சபரிமலை செல்லும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்காக நெல்லை சந்திப்பு சாலை குமார சுவாமி திருக்கோவிலில் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கப்பட்டன.
பூா்ணாகுதி முடிந்ததும் மஹா கணபதிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியர் சன்னதி முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து குருசாமிகளின் திருக்கரங்களால் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
முதலில் கன்னி ஐயப்பமாா்களும் அதனை தொடா்ந்து ஐயப்ப பக்தா்களும் மாலை அணிந்து கொண்டனா். அனைவரும் சரணகோஷ்களுடன் பஜனை பாடல்கள் பாடினா். விரதமணிந்து மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள் 18 படி வழியாக இன்று முதல் சுவாமி ஐயப்பனை தாிசிக்கின்றனா்.