in

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள்

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள்

 

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச் செல்லும் காட்சிகள்.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை உள்ளது என்பதால் நேற்று காலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவல மலையை கிரிவலம் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்காக தமிழகம் ஆந்திரா, கர்நாடகா கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர் இவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் கார்களில் மூலம் வந்து கிரிவலம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இவர்கள் கிரிவலம் முடித்துவிட்டு இன்று ஊர் திரும்பும் பொழுது திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை காட்பாடி மார்க்கமாக திருப்பதிக்கு செல்லும் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறி சென்றனர்.

மேலும் இது போன்ற விசேஷ தினங்களில் அதிக அளவு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகவே உள்ளது.

What do you think?

சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க விடிய விடிய கொட்டும் மழையிலும் கிரிவலம்

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு