in

தென்காசியில் 33 ஆவது ஆண்டாக அச்சன் கோயில் ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு

தென்காசியில் 33 ஆவது ஆண்டாக அச்சன் கோயில் ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு

 

தென்காசியில் 33 ஆவது ஆண்டாக அச்சன் கோயில் ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன் கோவில் தமிழகத்தின் தென்காசிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடக்கும் ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தூங்குகிறது.

இக்கோவிலுக்குரிய திருவாபரணங்கள் கேரள மாநிலம் புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாராட்டு திருவிழாவின் போது இவை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்படும்.

தங்க அங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் அடங்கிய இந்தப் பட்டியில் அதிசய தங்க வாள் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. காந்த மலையில் ஐயப்ப சுவாமி பயன்படுத்திய வால் இது என்று கூறப்படுகிறது.

இடத்திற்கு இடம் எடை வேறுபடும் என்பதே இந்த வாளின் சிறப்பு அம்சமாகும். கருவூலத்தில் ஒரு எடையும் கோவிலுக்கு வந்தபின் ஒரு எடையுமாக வேறுபாடுடன் இருப்பது வேறு எங்கும் இல்லாத அதிசயமாகும்.

செங்கோட்டைக்கு செல்லும் வழியில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு இந்த திருவாபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தது வழக்கம் நடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்நிகழ்ச்சி 33வது ஆண்டாக இன்று நடக்கிறது.

புனலூர் கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட திருவாபரணங்கள் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.

திருவாபரண பெட்டி யாத்திரைக்காக தென்காசியை சேர்ந்த ஏ சி எஸ் ஜி ஹரிஹரன் சிறப்பு அதிகாரியாக கேரளா தேவசம்போரால் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டது.

வழியில் புனலூர் தென்மலை ஆரியங்காவு விஸ்வநாதபுரம் செங்கோட்டை ஆகிய இடங்களிலும் திருவாபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பளித்தனர்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியை ஒட்டி திருவாபரண வரவேற்பு கமிட்டி சார்பில் சுமார் 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அச்சன் கோயில் ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஒன்பதாம் நாளான வரும் 24 ஆம் தேதி தேரோட்ட வைபவமும்ம பத்தாம் நாளான 25ஆம் தேதி ஆராட்டு வைபவம் நடக்கிறது.

What do you think?

குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலும் மூழ்கிய நிலையில் கோவில் வெளியே தெரிகிறது

அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் (தனுா் மாதம்) மாா்கழி மாதபிறப்பை முன்னிட்டு கோ பூஜை