in

வெறும் கையால் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் உற்சாக வழிபாடு

வெறும் கையால் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் உற்சாக வழிபாடு

 

வெறும் கையால் தீச்சட்டி எடுத்து 5மணி நேரம் நகரின் முக்கிய வீதிகளில் ஆடியவாறு அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உற்சாக வழிபாடு. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கிராம கோவிலில் ஒன்றான அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலின் 3 நாட்கள் நடைபெறும் ஆனிபெருந்திருவிழா நேற்று துவங்கியது.

கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் முக்கிய மூன்று நாட்களில் நடைபெறும் திருவிழாவின் இரண்டாவது நாளாக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக 30 பக்தர்கள் குழுவாக சேர்ந்து வெறுங்கையில் தீச்சட்டி ஏந்தி தெருக்களில் ஆடியவாறே 5 மணி நேரத்திற்கும் மேலாக நகர் வலம் வந்தனர். சுமார் 5 கிலோ மீட்டர் துரம் இவ்வாறு தீ சட்டியுடன் ஆடியவாறு 3 குழுக்கள் அருள்மிகு கௌமாரியம்மனின் கோவிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திகடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான இந்த ஆட்ட தீச்சட்டி எடுக்கும் நிகழ்வினை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த திருவிழாவிற்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

What do you think?

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….

ஆன்லைன் மூலம் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும் என மோசடி செய்த இருவர் கைது