தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பநல கோர்ட்டில்… விவாகரத்து உறுதியானது
விவாகரத்து சம்மந்தமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பநல கோர்ட்…டில் நேற்று ஆஜரானார்கள். நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு இருமகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்..
இவர்களை சமாதானப்படுத்த இது குடும்பங்களும் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களை நேரில் ஆஜராவதற்காக நீதிமன்றம் மூன்று முறை சம்மன் அனுப்பியிருந்தும் . வர மறுத்த இவர்கள் இந்த முறை கோர்ட்டுக்கு வந்தார்கள். இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி சுபாதேவி சுயமாக நீங்கள் முடிவெடுக்க உங்களுக்கு ஆறு மாத மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது இந்த மனுவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இருவருமே தங்கள் முடிவில் மாற்றம் இல்லை என்றும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர் . இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் அவரை சந்தித்து தைரியமாக இருங்கள் எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறினார் தனுஷ் அதனால் தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்பொழுது பொய்யாகி விட்டது. இவர்கள் மட்டுமல்ல இரு குடும்பத்தினரின் சமாதான முயற்சியும் வீணாகி விட்டது.