தனுஷ், அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுகிறது
நடிகரும் இயக்குநருமான தனுஷ் நடிகை நித்யா மேனனுடன் இணைந்து நடிக்கும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று நேற்று அறிவித்தார்.
தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், சிவனேசன் இட்லி கடைக்கு எதிரே நிற்பது போன்ற ஒரு சுவரொட்டியுடன் செய்தியை அறிவித்தார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.. தனுஷ் இயக்கும் நான்காவது படம் இட்லி கடை, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சேகர் கம்முலாவின் இயகத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடிக்கும் குபேரா படம் முதலில் வெளியாகும் என்று அறிவிக்க பட்டது ஆனால் இப்படத்தில் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கபட்டுள்ளது.
அஜித்தின்’ Good Bad Ugly திரைப்படமும் ஏப்ரல் 10…ஆம் தேதி வெளியாகிறது. இரு தலைகளின் படமும் ஒன்றாக மோதுவதால் தனுஷ் ரசிகர்கள் அஜீத் ரசிகர்களை வம்பிழுக்க தொடங்கிவிட்டனர்.
தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் விடாமுயற்சி ஊதிக்கிச்சி ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் அஜித்தின் சினிமா சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது என்று கலாயிக்க ஆரம்பிச்சிட்டாங்க.