நெகட்டிவ் கமெண்டர்ஸ்க்கு தனுஷ் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார்
நெப்போலியன் மகன் தனுஷ் தசை அயற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பினும் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நெப்போலியன் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கப்பல் மூலம் பயணம் செய்கிறார்./
இவருக்கு சேலத்தில் இருக்கும் பெண்ணுடன் நிச்சயம் முடிந்த பிறகு இவர்கலுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தார் நெப்போலியன்.
தனுஷின் திருமணத்தை பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நெகட்டிவ் கமெண்டர்ஸ்க்கு தனுஷ் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். எனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸை பார்த்து நான் வருத்தப்படவில்லை என்னால் முடியாதது என்று மற்றவர்கள் கூறுவதை நான் செய்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னால் எல்லாம் முடியும் என்று நான் எப்போதும் நினைப்பேன் நெகட்டிவ் ஆக நான் எப்பொழுதும் சிந்தித்ததில்லை. எனக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு நான் நிச்சயம் நன்றாக வாழ்ந்து பதிலடி கொடுப்பேன் என்று பாசிட்டிவாக பதில் அளித்திருக்கிறார்.
தனுஷின் பதிவை பார்த்த பல நெட்டிசன்கள் இவரின் மன தைரியத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நெப்போலியன் மற்றவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்யாதீர்கள் வாழுங்கள் மற்றவர்களை வாழ விடுங்கள் என்று உருக்கமாக போஸ்ட் செய்திருக்கிறார்.