முன்பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுக்கும் தனுஷ்
தனுஷ் முன்பணம் பெற்றுக்கொண்டு ஓராண்டு காலமாக படத்திற்கு கால் ஷர்ட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் பரப்பரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கதிரேசன் ஒரு அறிக்கையை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார். அதில் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் முன்பணம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் இன்னும் தரவில்லை என்று கூறினேன் அதற்கு செல்வமணி உங்கள் படத்திற்கு முன்பு Dawn பிக்சர்ஸ் தயாரிக்கும் இட்லி கடை திரைப்படம் முடிய வேண்டும் மேல் இடத்து உத்தரவு என்று கூறினீர்கள்.
அக்டோபர் மாதத்திற்குள் எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதாகவும் உறுதியளித்தீர்கள் ஆனால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை தயாரிப்பாளர்களின் நலன் கருதி அரசியலை கலக்காமல் எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இவர் வெளியிட்ட அறிக்கையால் தனுஷின் இட்லி கடை படத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.