தனுஷ்…யின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் இயக்கிய, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஒரு புதிய கோணத்தில் சொல்ல பட்ட காதல் கதை என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..
தனது 50வது படமான ராயனின் வெற்றிக்குப் பிறகு, நடிகரும் இயக்குனருமான தனுஷ் தனது மூன்றாவது இயக்கமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) என்ற திரைப்படத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு ”கோல்டன் ஸ்பேரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு போஸ்டருடன் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இந்த பாடலில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தனுஷின் ஆடுகளம், அசுரன், பொல்லாதவன், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார், காதலர் தினத்தை ஒட்டி இப்படம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவித்துள்ளார்.