ஐஸ்வர்யா மேல் தனுஷ்….க்கு இன்னும் பாசம் இருக்கிறது
நடிகர்களுக்கு அழகு தேவையில்லை திறமை இருந்தால் மட்டும் போதும் என்று தனக்கே உரித்தான ஸ்டைலில் வெற்றி கண்டவர் நடிகர் தனுஷ்.
அன்மையில் வெளியான ராயன் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்பொழுது குபேரா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இவர் திரை உலகை பிசியாக இருக்கும் போதே ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யவை காதலித்து திருமணம் செய்தவருக்கு இரண்டு மகன்கள் உண்டு.
பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் திடிரென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்த வர்களை இரு குடும்பத்தாரும் சேர்த்து வைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில் இருவரும் அதற்காக ஒத்துழைப்பும் கொடுக்காத நிலையில் அவரவர் பாதையில் இருவரும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு முதல் ஆளாக தனுஷ் Likes போட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு ஐஸ்வர்யாவின் மேல் இன்னும் அன்பும் காதலும் இருக்கிறது விரைவில் இவர்கள் இருவரும் இணைய வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.