எதிர்ப்பை மீறி ….வெளியிட்ட நயன்தாரா…. ஆவணப்படத்தின் மீது தனுஷ் 10 கோடி ரூபாய் வழக்கு
நயன்தாரா…வின் பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற ஆவணப்படம் தொடர்பாக தனுஷிடம் 10 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நடிகை நயன்தாரா அவருக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அப்படியென்றால், நயன்தாராவுக்கும், தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் உண்மையான காரணம் என்ன? என்பதை பார்போம். நயன்தாராவின் திருமண ஆவணப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோ சென்ற வாரம் வெளியாகி எதிர்பார்ப்பையும் சலசல..பையும் உண்டாக்கிய நிலையில், ஆவண படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூன்று வினாடி கிளிப்ஸ் நேற்று திரையிடப்பட்ட, சிறப்பு காட்சியில் இடம்பெற்றிருந்தது . .இதற்காக தனுஷிடம் அனுமதி கேட்டபோது அவர் மறுத்து விட்டதாக நயன்தாரா கூறியிருந்தார். தனுஷ் மறுப்பு தெரிவித்தும் அவரது எதிர்ப்பை மீறி நயன்தாராவின் ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார் . நயன்தாரா தரப்பு பலமுறை படத்தைத் தயாரித்த தனுஷிடம் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்குமாறு கோரினார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக என்ஓசியைப் பெற தம்பதியினர் நடந்தபோதும்,அவர் பிடி கொடுக்க வில்லை .noc…வேண்டும் என்றால் தன் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும், அல்லது தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று தனுஷ் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக நயன்தாரா ஒரு பதிவையும் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம், ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, தனுஷ் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகக் சிவனுக்கு எதிராக legal நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.. நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல அவரது திரைப்பயணம், நானும் ரௌடி தான் என்ற படத்தின் போது விக்னேஷ் சிவனை படபிடிப்பில் பார்த்த பொழுது ஏற்பட்ட காதலில் தொடங்கி தனது குழந்தைகள் வரை அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியான பொழுது இது பற்றி தனுஷ் அந்த படத்தில் நடித்த ராதிகாவிடம் கேட்ட உரையாடலை ராதிகா ஒரு முறை வெளியிட்டு இருந்தார். ராதிகாவின் உரையாடலும் ஆவணப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது .இந்நிலையில் தனுஷின் எதிர்ப்பு மீறி நயன்தாரா அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆவணப்படுத்தி சேர்திருப்பதால் தனுஷ் தற்போது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளார்.