in

தருமபுரம் மடாதிபதியின் ஆபாச வீடியோ விவகாரம் மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு


Watch – YouTube Click

தருமபுரம் மடாதிபதியின் ஆபாச வீடியோ விவகாரம் மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

தருமபுரம் மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு.

தஞ்சை பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் குடியரசு ஆகியோரை மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி ஜாமீன்
வழங்கி உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை தருமபுரம் 27வது ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச ஆடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டியும், ஆதீனத்தின் சகோதரரை கொல்ல முயற்சித்த வழக்கில், பிப்ரவரி 28ஆம் தேதி ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து முதல் குற்றவாளியாக தஞ்சை பாஜக வடக்கு மாவட்ட பொது செயலாளர் வினோத், ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்கி, செம்பனார்கோவில் குடியரசு, திருக்கடையூர் விஜயகுமார், செஞ்சி அதிமுக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பாஜக மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் ஸ்ரீனிவாஸ், ஆதீனத்தின் புகைப்பட கலைஞர் பிரபாகர் ஆகிய 9 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று வினோத், விக்கி, குடியரசு ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு நபர்களை கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

மற்ற ஐந்து நபர்கள் தலைமறைவாகியிருந்தனர். அதில் மார்ச் 15-ஆம் தேதி மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசந்திரன் செஞ்சி அதிமுக மாவட்ட வழக்கறிஞர், அவர் பிப்ரவரி 26 ஆம் தேதியே தாய்லாந்து நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார்.வழக்கில் உள்ள 4 நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.

சிறையில் உள்ள ஐந்து நபர்களும் முன் ஜாமின் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இதில் ஸ்ரீநிவாஸ் என்பவர் சென்ற மாதம் பிணையில் சென்றார்.

அகோரம், வினோத், விக்னேஷ் குடியரசு ஆகிய நான்கு நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டது. இதில் அகோரம் மயிலாடுதுறை கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற மூன்று நபர்களும் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வினோத், விக்னேஷ், குடியரசு ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஐந்து முறையும் ஜாமீன் கேட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று மூவருக்கும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி கலைவாணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் மூவரும் தினந்தோறும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி

புதுச்சேரி விமான சேவை அக்டோபர் மாதம் துவங்கும் என நிறுவனம் தகவல்