தருமபுரம் ஆதின மடாதிபதியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விக்னேஷ் மற்றும் வினோத் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன மடாதிபதியை ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த வழக்கில் ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அகோரம், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளி தாளாளர் குடியரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளான வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஜாமீன் வேண்டி மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்