வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் களத்தில் இறங்கிய தாவேக
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது
அதேபோன்று நவம்பர் 23 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில்
மதுரை மத்திய மற்றும் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் TVK சார்பில் இன்று ஆரப்பாளையம் கிராஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
குறிப்பாக அனுமதி பெற்ற நான்கு ஆட்டோக்களில் சிறிய அளவிலான ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்ததான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வரும் வேலையில்
டி வி கே நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று அப்பகுதியில் இருக்கக்கூடிய பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் வழங்கி மறவாமல் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்
தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் விஜய் அன்பன் கல்லணை தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர்