in

ரசிகர்களின் மனதை வேட்டையன் வேட்டை ஆடியதா


Watch – YouTube Click

ரசிகர்களின் மனதை வேட்டையன் வேட்டை ஆடியதா

 

D.J. ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையின் படம் இன்று காலை சிறப்பு காட்சியாக 9:00 மணிக்கு திரையிடப்பட்டது.

இன்று இரவு இரண்டு மணி வரை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ரசிகர்களின் மனதை வேட்டையன் வேட்டை ஆடியதா என்பதை பார்ப்போம்.

இப்படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியார், பகத் பாசில், ராணா, அமிதாபச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஸ்ருதிஹாசன், அபிராமி, ரோகினி உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசை அனிருத். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வரும் ரஜினிகாந்த் போலீஸ் உடையில் மெடுக்காக காட்சியளிக்கிறார். தான் தவறாக செய்த என்கவுண்டருக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை வேட்டையாடவே சட்டத்தை தன் கையில் எடுக்கிறார்.

ரஜினிகாந்த் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று போராடும் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியா நடித்திருக்கிறார். முதல் 20 நிமிடத்தில் வழக்கம் போல் ரஜினி தன் மாஸ்டைலால் ரசிகர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார்.

அதன் பிறகு குற்றத்தை விசாரிப்பதில் கதை நகர்கிறது. பகத் பாசிலை வெல்லானாக பார்த்த நமக்கு இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை கதாபாத்திரம் ரசிக்கும் படியாக இருக்கிறது.

டிஜே ஞானவேல் ரஜினிகாந்தை இப்படத்தில் அருமையாக கையாண்டு இருக்கிறார். ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா கொடுத்த வெற்றியை விட வேட்டையன் அவரது கேரியரில் முக்கியமான படமாக இடம்பெறும் என்பதில் டவுட் இல்லை ஒவ்வொரு காட்சியையும் அழகாகவும் அருமையாகவும் செதுக்கியிருக்கிறார் டிஜே ஞானவேல் திரைக்கதைக்கு பக்கபலமாக அனிருத்தின் இசை அருமை நிச்சயம் இப்படம் பிளாக் பாஸ்டர் மூவியாக இருக்கும் வசூல் ரீதியில் தலைவர் நின்னு விளையாடுவார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எப்படி யோசிச்சாலும் படத்தில் குறையே கூற முடியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் அருமையாக அமைத்திருக்கிறார் இயக்குனர் காட்சிகளை மட்டும் அல்ல இத்தனை நட்சத்திரங்களையும் அருமையாக கையாண்டு இருக்கிறார்.

ரஜினிகாந்தின் படம் எப்போதுமே சற்று நகைச்சுவையாக இருக்கும் வேட்டையனும் கமர்ஷியல் பிளஸ் ஆக்சன் மூவியாக அமைந்திருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்களும் போடுங்கடா வெடிய தலைவருக்கு வயசெல்லாம் எங்க தலைவருக்கு தூசு அப்படின்னு அலம்பற பண்றாங்க.

இந்த படம் சிறப்பாக அமைந்ததற்கு சூர்யாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் டிஜே ஞானவேல் இந்த கதையை முதலில் சூர்யாவிடம் தான் கூறியிருக்கிறேன் நான் நடிப்பதை விட ரஜினிகாந்த் சார் நடித்த படம் அருமையாக இருக்கும் என்று ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைத்ததே சூர்யா தான்.


Watch – YouTube Click

What do you think?

கோயில் நிலங்கள் அரசு பொறுப்பில் இருக்கும்போது அதை தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும்

மயிரிழையில் உயிர்தப்பிய காவல்துறை அதிகாரி