இப்பதான் தப்பு…ன்னு தெரிஞ்சதா… சமந்தாவை விளாசிய ரசிகர்
Myositis; பாதிப்பில் இருந்து வெளிவந்த நடிகை சமந்தா தற்பொழுது நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் Pod Cast மூலம் உடல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவிடம் இப்பொழுதெல்லாம் நன்றாக பேசுகிறீர்கள் ஆனால் இதற்கு முன் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல பொருள்களுக்கு விளம்பரம் செய்தீர்கள் அல்லவா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சமந்தா இதற்கு முன் நான் பல தவறுகள் செய்தது உண்மைதான் ஆனால் அவை எல்லாம் எனக்கு தெரியாமல் செய்த தவறுகள் தெரிந்த பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை நான் நிறுத்தி விட்டேன்.
இப்பொழுது நான் எதை செய்கிறேனோ அதை பற்றி மட்டும் தான் பேசுகிறேன் என்று பதில் அளித்தார்..