திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கொண்டாடிய தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் மொகரம் பண்டிகை இஸ்லாமியர்கள் கொண்டாடும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி பூமாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர்.
பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.இவ்விழாவை இஸ்லாமியர்கள் கொண்டாடும் போது இந்துக்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் “கரகம்” எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து அல்லாவிடம் வேண்டிக்கொண்டு தீ மிதிக்க இறங்குவோம் என்றனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்