in

குற்றாலம் போல் காட்சியளிக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை விழுந்த மழைநீர்


Watch – YouTube Click

குற்றாலம் போல் காட்சியளிக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை விழுந்த மழைநீர்

 

திண்டுக்கல்லில் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சி, பொதுமக்கள் மகிழ்ச்சி – குற்றாலம் போல் காட்சியளிக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை விழுந்த மழைநீர்

தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது மாலை வானம் கரும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் திடீரென மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது இதனால் சாலைகள் மற்றும் தெருக்களின் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தற்பொழுது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் திண்டுக்கல் மலைகோட்டையில் இருந்து மழைநீர்
குற்றாலம் போல் காட்சியளித்தது.மேலும் தொடர்ந்து பெய்து திண்டுக்கல்லை சுற்றியுள்ள ஆத்தூர், சின்னாளப்பட்டி, செம்பட்டி, தாடிக்கொம்பு, சிலப்பாடி, நத்தம், ஒட்டன்சத்திரம், ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள நாகல் நகர், பேகம்பூர் , RMகாலனி, NGO காலனி, முருகபவனம் , ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

கண் துடைப்புக்காக கவரால் சீல் கலெக்டர் உத்தரவின் பேரில் நடத்த சோகம்

திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு சரியில்லை பாமக மாநில பொருளாளர் திலகபாமா பேட்டி