in

திண்டுக்கல்லில் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் பேட்டி


Watch – YouTube Click

திண்டுக்கல்லில் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் பேட்டி

 

திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு வாரியத் தலைவர் பொன் குமார் வருகை தந்தார். பின்னர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டிருந்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் ஆகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் மூன்று மாத காலம் அரசு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய முடியவில்லை, இறந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை, தேர்தல் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டதால் முதல் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளேன் என்றார்.

திமுக அரசு பதவியேற்ற மூன்றாண்டு காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 56 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 56 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இது வரலாற்றுச் சாதனையாகும் முதலமைச்சர் மீது தொழிலாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. இந்த மூன்று ஆண்டு காலத்தில் 1,555 கோடி நலத்திட்ட உதவிகள் 18 வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நலவாரிய அலுவலகத்தில் பழுதாகி இருந்த சர்வர் தற்பொழுது சரி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மக்களுடைய ஆதரவு பெற வேண்டும். மக்களுடைய ஆதரவு பெற வேண்டும் என்றால் ஜனநாயக ரீதியில் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தக்கூடிய முதல்வராக இருக்க வேண்டும்.

அப்படி முதல்வர் ஸ்டாலின் இருப்பதினால் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி கிடைத்துள்ளது. சர்வாதிகாரத்தை திணிக்க நினைத்தவர்கள் மக்களை புறக்கணித்தவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு தமிழக முதல்வர் மேலும் நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும். தொழிலாளர் நலத்துறையில் கணினி சரி செய்யப்பட்டுள்ளதால் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் முழுமையாக ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா வாரியத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே வாரியம் உள்ளது ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் திருநங்கைகளுக்கு என்று தனி வாரியம், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி வாரியம் என இதுபோல் 36 வாரியங்கள் உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.


Watch – YouTube Click

What do you think?

புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகி புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்

ரோஜாப்பூ வழங்கியும், பன்னீர் தெளித்தும் பள்ளி மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்….