in ,

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வீதி உலா

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வீதி உலா

 

திண்டிவனம் இலுப்பதோப்பு அருள்பாலித்து வரும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இரவு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற்றது.

இரவு மூலவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசத்துடன் முத்து மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் வண்ணவிளக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் இரவு வீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழா குதிரை வாகன வீதி உலா

திண்டிவனம் மரக்காணம் பவானி அம்மன் கோவிலில் 1008 சங்கு சிறப்பு அபிஷேகம்