in ,

திண்டிவனம் அடுத்த நெடி திரவுபதி அம்மன் ஆலயத்தில் வசந்த பெருவிழா தீமிதி திருவிழா

திண்டிவனம் அடுத்த நெடி திரவுபதி அம்மன் ஆலயத்தில் வசந்த பெருவிழா தீமிதி திருவிழா

 

திண்டிவனம் அடுத்த நெடி திரவுபதி அம்மன் ஆலயத்தில் வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெடி கிராமத்தில் கோவில் கொண்டுள்ள திரவுபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த பெருவிழா துவங்கியது.

கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கியது.

வசந்த உற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக அர்ஜுனன், திரவுபதி, சுபத்ரா கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்ட சுவாமிகள் மற்றும் சக்தி கரகம் கோவிலில் இருந்து ஊர்வலமாக தீக்குண்டம் வைக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து சக்தி கரகம், அர்ஜுனன், திரவுபதி உள்ளிட்ட தெய்வங்கள் தீக்குண்டத்தில் இறங்கி இதைத் தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கொங்கராம்பூண்டி ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னிவசந்த விழா

திண்டிவனம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா