திண்டிவனம் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வண்ணமலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஏணி மீது ஏறி வெண்ணெய் எடுக்கும் நிகழ்வு போல் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு பெற்ற சிலம்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் சிறுமியர் ராதை வேடம் அணிந்து கோலாட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.
மேலும் கோவில் வளாகம், பெருமாள் கோவில் தெரு , நேரு வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் பங்கு பெற்ற உறியடி திருவிழா நடைபெற்றது. இளைஞர்கள் ஆர்வமுடன் உறியடி திருவிழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து உறியடி திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டிவனம் யாதவ் மகா சபையினர்பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் . மேலும் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.