மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் நேரடி ஆய்வு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் நாளை மே 24ம் தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த படகு உரிமையாளர் ஆய்வு நாளான்று படகிளை தங்களது பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்தில் நிறுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிகலன்களில் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் எழுதி இருத்தல் வேண்டும் மற்றும் மீன்பிடி கலன்களுக்கு வரையருக்கப்பட்ட வண்ணக்குறியீட்டில் படகானது இருத்தல் வேண்டும். ஆய்வுசெய்யும் நாளில் படகின் பதிவு சான்று. மீன்பிடி உரிமம், படகு காப்பீடு உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் பாஸ் புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள் மற்றும் கடற்பயன பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றினை ஆய்வு குழுவினரிடம் காண்பிக்க வேண்டும்.
மேலும் ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு விற்பனை வரி வரிவிலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவு சான்று உரிய விசாரணைக்குப்பின் இரத்து செய்யப்படும்.
ஆய்வு நாளன்று படகிளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் படகினை ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது எனவே அனைத்து மீன்பிடி கலன்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட படகு உரிமையாளர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் அனைத்தும் வரும் ஜுன் 10 ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.