in

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் மறைவு


Watch – YouTube Click

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் மறைவு

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.

கே.எஸ். ரவிக்குமார், பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன் போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

1990ல் கே.எஸ். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரித்த இந்தப் படத்தில் ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு என நான்கு நடிகர்கள் நடித்திருந்தனர்.

கதாநாயகிகளாக நடிகைகள் ரேகா மற்றும் சித்தாரா நடித்துள்ளனர். முதல் படமே ஹிட் ஆனதால் அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். ருக்மணி அம்மாள் (வயது 88). சமீப காலமாக வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 2:30 மணிக்கு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோயில் அவென்யூ சாலையில் உள்ள இயக்குனர் ரவிக்குமார் இல்லத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களும் ரசிகர்களும் ரவிக்குமாருக்கு ஆறுதல் கூறி அவரது தாயாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவரை தாக்கிய சக மாணவர்கள்

வைரலாகும் கீர்த்தி சுரேஷ் Invitation