in

தனுஷ்…யின் 55 படத்தின் இயக்குனர்

தனுஷ்…யின் 55 படத்தின் இயக்குனர்

கடந்த வார இறுதியில் சென்னையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் ஏற்பாடு செய்த ‘ஊடக மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாட்டில்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் 55வது படம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

பல திரைப்படத் துறை பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, தனுஷுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.

“இந்தப் படத்திற்காக, தனுஷ் போன்ற ஒரு நடிகரை நான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறமையை நிறைவு செய்யும் பல அம்சங்கல் இருக்கிறது ” மேலும், ஸ்கிரிப்ட் தனுஷுக்காக மட்டுமே எழுதப்படவில்லை, ஆனால் ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் எப்போதும் முழு சுதந்திரத்தை கொடுக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் தனது x தளத்தில் தனுஷின் 55வது படத்திற்காக நடத்தப்பட்ட பூஜை புகைப்படத்தை வெளியிட்டு “மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

தனுஷ், அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுகிறது

குத்தாலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்