திருவாரூரில் வேளாண் முனைவர் பட்ட மாணவர் விபரீத முடிவு
திருவாரூரில் வேளாண் முனைவர் பட்ட மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளம் குடி தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் சிவலிங்கம் (28). இவர், முனைவர் பட்டம் பெறுவதற்காக குறுக்கத்தி வேளாண் பயிற்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் என்பவரை, வழிகாட்டி பேராசிரியராக கொண்டு முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இதற்காக திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியில் உள்ள பேராசிரியர் பாலசுப்பிரமணியனின் உறவினர் வீட்டின் மாடியில் தங்கி உள்ளார்.
மேலும் திருவாரூர் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திலும் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியனின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், சிவலிங்கம் தங்கி இருந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கும் பாலசுப்பிரமணியத்துக்கும் தகவல் கொடுத்த நிலையில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த மின்விசிறியில் போர்வையை கொண்டு தூக்கிட்டு நிலையில் சிவலிங்கம் உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.
உடனடியாக சிவலிங்கத்தின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிவலிங்கத்தின் சொந்த ஊரான கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பெற்றோர் ர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.