in

10 இடங்களில் பேரிடர் மேலாண்மைத்துறை ஒத்திகை நிகழ்ச்சி


Watch – YouTube Click

10 இடங்களில் பேரிடர் மேலாண்மைத்துறை ஒத்திகை நிகழ்ச்சி

புதுச்சேரியில் புயல் வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்காக 10 இடங்களில் பேரிடர்மேலாண்மைத்துறை அதிகாரிகள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டது

புதுச்சேரி தானே புயலுக்கு பிறகு பல்வேறு புயல் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் புதுச்சேரியில் இன்று ஒரே‌ நேரத்தில் கீழ்கண்ட பத்து இடங்களில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் பேரிடர் ஒத்திகையில் கடலோர காவல் படை ஒருங்கிணைப்புடன் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளும் பங்கேற்றுள்ளது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி துறைமுகம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, காலப்பட்டு, உதியம் பட்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்று வருகின்றது.

ஒத்திகையில் புயலின்போது பாதிக்கப்படும் கடற்கரை கிராமமக்களை மீட்பது, வெள்ளம் ஏற்பட்டால் சமையல் எரிவாயு கிடங்கு, மின்சார துணை மின் நிலையத்தை பாதுகாப்பது.

அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தால் அங்கு சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை எவ்வாறு அப்புறப்படுத்தி அதே சிகிச்சையை அளிப்பது என்பது குறித்து தத்துரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்தி காட்டப்பட்டது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட ஒத்திகையின்போது பிற நோயாளிகள் திடீர் அதிர்ச்ச்சிக்குள்ளாகினர். இது ஒத்திகை என ஒலிபெருக்கு மூலம் கூறினார்கள். இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரியை புயல் பாதித்த்தாம தேசிய பேரிடர் மேலாண்மை அறிவித்தது.

சற்று விநாடிகளில் இது ஒத்திகை நிகழ்ச்சி மட்டுமே எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாக வேண்டியதில்லை என புதுச்சேரி அரசு சார்பில் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தேர்தலில் போட்டிடுவது சஸ்பென்ஸ் என கூறினார்

இம்ரான் கான் கட்சியின் உமர் அயூப் பிரதமர் வேட்பாளராக நியமனம்