in

பேரிட மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி

பேரிட மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி

 

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வெள்ள தடுப்பு ஒத்திகை தொடர்பான செயல் விளக்கம் தீயணைப்புத் துறையினரால் அதிநவீன உபகரணங்கள் கொண்டு செய்து காட்டப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் உபகரணங்கள் கையாள்வது குறித்த பயிற்சி செயல் விளக்கத்துடன் அளிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தென் மாவட்டங்கள் கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிக மழைப்பொழிவு பதிவானதுடன் கடுமையான பாதிப்பையும் சந்தித்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது பருவமழையில் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பது தொடர்பான செயல்விளக்க ஒத்திகை மற்றும் பயிற்சி ஆகியவை நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி படித்துறையில் நடத்தி கட்டப்பட்டது.

இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தீயணைப்புத் துறையினரின் அதிநவீன உபகரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் வெள்ள காலங்களில் மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுவது தொடர்பாகவும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மேலும் அதிநவீன உபகரணங்களை கையாள்வது தொடர்பான செயல் விளக்கத்தையும் செய்து காட்டினர். தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சியும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

What do you think?

The Greatest Of All Time (GOAT) Cast & Crew

விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம்