in

தமிழக முதல்வர் கட்சி பாகுபாடின்றி மகளிர் உரிமை தொகை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு கிடைக்க வழிவகை செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

தமிழக முதல்வர் கட்சி பாகுபாடின்றி மகளிர் உரிமை தொகை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு கிடைக்க வழிவகை செய்தார். தகுதி வாய்ந்த அனைவருக்கும் விரைவில் உரிமை தொகை கிடைக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

நாகப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நாகை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் தலைமையில் நடைப்பெற்றது கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுடன் திராவிட மாடல் ஆட்சி கட்சி பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கான ஆட்சி என தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் கூறினார்.

தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் கட்சி பாகுபாடின்றி மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் தவறான தகவல் அளித்து இருப்பதால் மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மகளிர் உரிமை தொகை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மீண்டும் ஆவணங்கள் சரிபார்க்கவும் தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்து இருக்கிறார் என கூறினார்.

தமிழக அரசின் அனைத்து சாதனை திட்டங்களையும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகளும் தற்போது பின்பற்றவும் தொடங்கி இருப்பதாக கூறியதுடன் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தை யார் வேண்டுமானாலும் பார்க்க,கேட்க எப்போதும் தலைமை தடை விதிக்க வில்லை என காட்டமாக பதில் கூறினார்.

பிற கட்சிகள் தான் சாதாரண பொது குழு கூட்டத்தில் கூட செய்தியாளர்களை செய்து சேர்க்க அனுமதிப்பதில்லை என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What do you think?

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.

தண்ணீரில் மிதக்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய கார்கள்.