பாண்டிய மன்னன் போல வேடமடைந்து நூதன முறையில் முற்றுகைப் போராட்டம்
மதுரை ரயில் நிலைய விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் வைக்க கோரி பாண்டிய மன்னன் போல வேடமடைந்து நூதன முறையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழர் கட்சியின் நிர்வாகிகள்.
மதுரை ரயில் நிலையப் பகுதியில் விரிவாக்க பணிகளின் போது அங்கே அமைக்கப்பட்டிருந்த மீன் சிலை அகற்றப்பட்ட நிலையில் அதனை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இளைஞர் ஒருவர் பாண்டிய மன்னன் வேடமடைந்து கையில் செங்கோளுடன் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில்
போராட்டக்காரர்கள் இறுதியாக மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.
இந்த போராட்டத்தினால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பேட்டி தீரன் திருமுருகன் தமிழர் கட்சி பொதுச் செயலாளர்.