நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்
நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார் ; போச்சம்பள்ளி, சின்னாலப்பட்டு புதியடிசைன் புடைவைகளுக்கு நல்ல வரவேற்பு.
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி நாகை கடைத்தெருவில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு கடலூர் மண்டலத்திற்கு ஒரு கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்திற்கு 50 லட்சமாக விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் வகையில்
போச்சம்ப்பள்ளி, திருபுவனம் பட்டு, சேலம் காட்டன், நெகமம் காட்டன், கோரா புடவை, சின்னாலப்பட்டு , கூறைநாடு உள்ளிட்ட புதுரக புடவைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல சென்னிமலை போர்வைகள், ஆடவர் கலெக்சன், அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத தள்ளுபடி, சலுகை முறையில் 10 தவணையாக செலுத்துவது போன்ற திட்டங்கள் இருப்பதால் கோ ஆப்டெக்ஸ் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.