in

தூய்மை பணியாளர்ளுக்கு உணவு அளித்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்


Watch – YouTube Click

தூய்மை பணியாளர்ளுக்கு உணவு அளித்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

 

சித்ரா பௌர்ணமி கிரிவலம் – தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் பணிகளை பாராட்டி அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் உண்டு மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள்.

சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்ள உள்ளூர், வெளிமாவட்டம், ஆந்திராதெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

இந்த கிரிவலத்தின் போது பக்தர்கள் திருவண்ணாமலை நகரப் பகுதிகள் மற்றும் நிறுவன பாதையில் வீசி சென்ற குப்பைகளை அகற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு துரிதமாக குப்பைகளை அகற்றினர்.

இந்தப் பணிகளில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கிரிவல பாதையில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது பணிகளை பாராட்டினார்கள்.

மேலும் இந்தப் பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மதிய உணவை வழங்கினார். மேலும் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

 திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழா

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்