in

காரைக்கால் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு

காரைக்கால் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் இருந்து பாண்டி சாராயம் கடத்தி ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது இங்கிருந்து எளிதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் நண்டலாறு ஆயர்பாடி நல்லாடை ஆகிய சோதனை சாவடிகள் வழியாக பாண்டி சாராயம் கடத்திவரப்பட்டு பாண்டி ஐஸ் என்ற பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் பாண்டி சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இதனை மேலும் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கருத்து தெரிவித்திருந்தார் இந்நிலையில் திடீரென்று இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டத்துடன் சோதனை சாவடிகளில் கூடுதலாக சுழற்சி முறையில் காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் காவல்துறையினருக்கு போதை பொருள் தடுப்பு பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடன் இருந்தார்.

What do you think?

புன்னகை பூவே நாயகி மாற்றம்

திருவலஞ்சுழியில் கொலை மற்றும் தற்கொலைக்கு நீதி கேட்டு சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்