நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர்திறக்கப்பட்டது. அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீரை திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனை அடுத்து அரசு சார்பில் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று அணையில் இருந்து பெருங்கால் பாபசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். விநாடிக்கு 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கருத்திற்கொண்டு மணிமுத்தாறு பெருங்கால்பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் 05.09.24 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டடத்திற்கு உட்பட ஐயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கப்பட்டி, வைராவிக்குளம், தெற்கு பாப்பன்குளம் பகுதியில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.