in

புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்

புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்

 

புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சரியான நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார் மேலும் மாணவர்களின் கற்றல் திறனையும் கேட்டறிந்தார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியின் கிராமப்பகுதியான தவளகுப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது ஆசியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார் தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை குறித்தும் எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டறிந்து பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

மேலும், நீட் தேர்விற்கு நன்றாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு தொடர்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

What do you think?

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் மீறல்; பாஜக எம்எல்ஏவின் பேனரை போலீசார் அகற்றினர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.