மூன்றாவது புத்தகத் திருளிழாவிற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டார்
மூன்றாவது புத்தகத் திருளிழாவிற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருளிழாவிற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டார்.
முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் துறையைச் சார்ந்த அதிகாரியிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.