in

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை பெற்றோர் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கதறி அழுது குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. நன்றாக படிக்ககூடிய மாணவி பிட் அடித்ததாக கூறி பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கதறி அழுது குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்- ராஜலெட்சுமி தமப்தியினர். ராமச்சந்திரன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் (ரோஷினி ராஜாம்பாள்) மயிலாடுதுறை அருகே மேலையூரில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்இ (அழகு ஜோதி அகாடமி) பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெற்றுள்ளது. பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த மாணவி (ரோஷினி ராஜாம்பாள்) பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மாணவி உடலை மீட்டு உடற்க்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மாணவி பிட் அடித்ததாக கூறி பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வந்தபோது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றாக படிக்ககூடிய மாணவியை தனியார் பள்ளி நிர்வாகம் பிட் அடித்ததாக மாணவர்கள் மத்தியில் வகுப்பறை வெளியில் நிற்க வைத்ததால் மனமுடைந்து தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் உரிய விசாரணை செய்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுது கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில ஆழ்த்தியது. மாணவி பிட் அடித்து மாட்டிகொண்டது குறித்து மாணவியின் பெற்றொர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் நன்றாக படிக்க சொன்னதாகவும் வகுப்பறை வெளியில் நிற்க வைக்கவில்லை. மாணவி உடனே வீட்டிற்கு சென்றதாகவும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

What do you think?

திருச்செம்பள்ளி பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு.

மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று 60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை