காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்
காந்தி ஜெயந்தியை ஒட்டி தஞ்சாவூர் முன்னாள் ராணுவத்தினர் மாளிகையில் அமைந்துள்ள காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் ரயிலடி அருகில் முன்னாள் ராணுவத்தினர் மாளிகை அமைந்துள்ளது. இங்குள்ள காதி அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து காந்தியடிகள் உருவப்படத்தை திறந்து வைத்து கதர் விற்பனையை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்திற்கு 1.20 கோடியில் விற்பனைக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலிஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் விற்பனைக்கு உள்ளது.
இவை அனைத்தும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், விரிப்புகள் கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது. இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கதர் பருத்திக்கு 30 சதவீதம், பட்டுக்கு 30 சதவீதம், பாலியஸ்டருக்கு 30 சதவீதம், உல்லனுக்கு இருபது சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் துயர் துடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.