பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு
தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 தேர்வு மையங்களில் 12,741 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரில் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர் கண்காணிப்பு பணிகளை ஆசிரியர்கள் சரியாக செய்யும்படியும், முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தேர்வுகளை முறையாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.