in

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருவாரூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் oht டேங்க் ஆபரேட்டர், தூய்மை பணியாளர் தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் பணி நிரந்தரம், காலம் முறை வரை ஊதியம்  உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை 15,000 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி