மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தலுக்கான செய்திகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அந்த வகையில் வரும் புதன்கிழமை 20 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனையும், 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது இதனை அடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து கட்சியினருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் நடத்தை விதிகள் வேட்பு மனு விநியோகம் வேட்பு மனு தாக்கல் வேட்பு மனு பரிசீலனை இவற்றில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தேர்தலை சமூகமாக நடத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அத்துடன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மூர்த்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.