நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அரசு பொறியியல் கல்லூரி மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் வாக்குப்பதிவும் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதியும் நடைபெறுகிறது
தமிழகத்தில் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது தேர்தல் தொடர்பான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் திருநெல்வேலி பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் ஆலங்குளம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பெறப்படும் வாக்குகள் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து எண்ணப்படும் எனவே அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்
இதில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மாநகர காவல் ஆணையர் மூர்த்தி காவல் துணை ஆணையர் கீதா பாளையங்கோட்டை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகள் அமைப்பது பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது கட்டுப்பாட்டெ அறை அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.