in

சாமி கும்பிட அரசு வாகனத்தை பயன்படுத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட பொறியாளர்கள்

சாமி கும்பிட அரசு வாகனத்தை பயன்படுத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட பொறியாளர்கள்

 

திருவாடானை கோவிலுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட பொறியாளர்கள் திருவாடானை பெரிய கோவிலுக்கு சாமி கும்பிட அரசு வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாடானையில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு சினேகிவல்லி தாயார் உடன்மர் ஆதி ரெத்தினேஸ்வரர் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து சாமி கும்பிட்டு செல்வர். இன்நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் அரசு வாகனத்தில் மாவட்ட அதிகாரிகள் சாமி கும்பிடுவதற்காக அரசு வாகனத்தை பயன்படுத்தி உள்ளனர்.

ஓட்டுநரிடம் கேட்டபோது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட பொறியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு விரைவாக நடந்து சென்றுவிட்டார்.

மேலும் பதில் கூற மறுத்துவிட்டு கோவில் குழு சென்று விட்டார். இப்படி அரசு பணத்தை வீணாக்கும் அதிகாரிகள் மற்றும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பு..!