in

கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாமில் மாவட்ட நீதிபதி பேச்சு

கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாமில் மாவட்ட நீதிபதி பேச்சு

 

குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வையுங்கள், கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட நீதிபதி பேச்சு ….

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தணிப்பாறை ராம்நகர் மலைவாழ் குடியிருப்பு பகுதியில் உள் நூற்றுக்கணக்கான மலைவாழ்மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கலந்து கொண்டு மருத்துவமுகாமை துவக்கி வைத்து பின்பு மலைவாழ் மக்களுக்கு போர்வை ,இனிப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் மலைவாழ் மக்களிடையே பேசிய மாவட்ட நீதிபதி ஜெயக்குமார்,

மலைவாழ் மக்களாகிய நீங்கள் தான் இந்த நாட்டின் முதன்மை குடிமக்கள்.

எந்த செலவுகளுன்றி உங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை கேட்டுப் பெறலாம்.

உங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைக்க வேண்டும்.
படிப்பு ஒன்று தான் வாழ்க்கை தரத்தையும், மரியாதையும், கௌரவத்தையும் கொடுக்கும்.

மனரீதியாக நன்றாக நீங்கள் இருப்பீர்கள் ஆனால் உடல் ரீதியாக உங்களது உடலை பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

What do you think?

சூப்பர் ஸ்டார்…ரா யாரு அவரு?

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை…