நெல்லையில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா , ஆகியவை சார்பில் நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் கலைவிழா நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திர இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வங்கிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து கலைவிழா போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழாவில் பேசுகையில் இளைஞர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில் நேரு யுவகேந்திரா சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், நேருயுவகேந்திரா மாவட்ட அலுவலர் ஞானசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.