in

மாவட்ட அளவிலான பாரம்பரிய வில்வித்தை போட்டி நடைபெற்றது

திருத்துறைப்பூண்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பாரம்பரிய வில்வித்தை போட்டி நடைபெற்றது இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

விளையாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் வில்வித்தை போட்டி திருத்துறைப்பூண்டி முத்து ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பாரம்பரிய வில்வித்தை சங்கம் திமுகவினர் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வில்வத்தை போட்டி நடைபெற்றது வில்வத்தைப் போட்டியை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்து சிறப்பு ஆற்றினார் இதில் 250க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர்

வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஜாகிர் உசேன் திமுக இளைஞரணி செயலாளர் வசந்த் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே 1000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும்