தெய்வீகத் திருமணம் அன்னபூரணி அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வு
தங்கத்தால் அணிவித்து திருமணம் இனிதே நிறைவேற்றது-திருமணம் முடிந்ததும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு உட்பட்ட ராஜாதோப்பு பகுதியில் காலை 10:30 மணி முதல் 11.30 மணிக்குள் அன்னபூரணி அரசு அவர்களின் ஆசிரமத்தில் இன்று அன்னபூரணி அரசு மற்றும் ரோஹித் ஆகியோரது திருமணம் நடைபெற்றது.
தற்போது ஆசிரமத்தின் முகப்பில் மற்றும் உட்புறத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு மணமக்களை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து ஆசிரமத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களிடம் ஆசி பெற்று தங்கத் தாலியை பக்தர்கள் எடுத்து தர அன்னபூரணிக்கு ரோகித் அணிவிக்க அன்னபூரணி- ரோஹித் திருமணம் இனிதே நிறைவுற்றது.
பின்னர் மணமகன் ரோகித் அன்னபூரணிக்கு மெட்டி அணிவித்தார். பின்னர் இருவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.
திருமணத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், இனிப்பு, வடை அப்பளம், பாயசம் என தடபுடலாக விருதுகள் பரிமாறப்பட்டது. பெண் சாமியார் அன்னபூரணி அயசுக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.